» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காவல்துறை பணிக்கான உடற்கூறு தேர்வு தொடங்கியது

திங்கள் 26, ஜூலை 2021 9:10:33 PM (IST)

தூத்துக்குடியில் காவல்துறை பணிகளுக்கான உடற்கூறு தேர்வு இன்று தொடங்கியது. இதில் சான்றிதழ் சரிபார்ப்பு, ஓட்டப்பந்தயம், உயரம், மார்பளவு கணக்கீடு செய்யப்பட்டது.

2020-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), சிறைக்காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி (ஆண்) விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துதேர்வு ஏற்கனவே கடந்த 13.12.2020 அன்று நடந்தது. 

இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 1,662 ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1231 ஆண் விண்ணப்பதாரர்கள் என மொத்தம் 2,893 ஆண் விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு தேர்வு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது.

முதல் நாளான இன்று 500 பேர் தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். முதலில் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன. தொடர்ந்து உயரம், மார்பளவு ஆகியவை கணக்கீடு செய்யப்பட்டன. பின்னர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தம் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி இந்த தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வு தூத்துக்குடி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ரெயில்வே டி.ஐ.ஜி ஜெயகவுரி நேரடி மேற்பார்வையில் நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி காவலர் பயிற்சி பள்ளி எஸ்பி ராஜராஜன் தலைமையிலான அதிகாரிகள் தேர்வை நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தேர்வு பணிகளை பார்வையிட்டார். இந்த தேர்வு வருகிற 2-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற உடல்திறன் தேர்வுகள் வருகிற 3-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory