» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் எச்1பி விசா திட்டத்தில் 90 சதவீதம் போலி : அமெரிக்க பொருளாதார நிபுணர் குற்றச்சாட்டு

புதன் 26, நவம்பர் 2025 5:46:45 PM (IST)

இந்தியாவில் எச்1பி விசா திட்டத்தில் 80-90 சதவீதம் போலியானவை  என அமெரிக்க பொருளாதார நிபுணர் டேவ் பிராட் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா முழுவதும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட மொத்த எச்1பி விசாக்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளன. சென்னைக்கு 220,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் 85,000 எச்1பி விசாக்கள் மட்டுமே உச்சவரம்பு. 

அது நிர்ணயித்த வரம்பை விட 2.5 மடங்கு அதிகம். எச்1 பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி நடந்துள்ளது. 71 சதவீத எச்1பி விசாக்கள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. 12 சதவீதம் பேர் மட்டுமே சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு வருகின்றனர். அங்கே ஏதோ நடக்கிறது என்பதை இது காட்டுகிறது. இந்தியாவில் எச்1பி விசா திட்டத்தில் 80-90 சதவீதம் போலியானவை. இந்தப் பிரச்னை அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது இவ்வாறு டேவ் பிராட் கூறினார்.

ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு மட்டுமே, அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும், 65 ஆயிரம் எச் 1 பி விசாக்களை வழங்கி வருகிறது. அத்துடன், அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களில் படித்த வெளிநாட்டு மாணவர்களுக்கும், இந்த வகை விசாக்கள், 20,000 வழங்கப்படும். இரண்டையும் சேர்த்தால், ஒவ்வொரு ஆண்டும் மொத்தம், 85,000 விசாக்கள் வழங்கப்படுகின்றன.

இந்த விசா பெற்றவர்கள், அமெரிக்காவில் மூன்றாண்டுகள் தங்கியிருந்து பணியாற்றலாம். தேவையெனில், மேலும் மூன்றாண்டுகளுக்கு விசா காலத்தை நீட்டிக்க முடியும். தற்போதைய நிலவரப்படி, எச்1பி விசா பெற்ற, 13 லட்சம் வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory