» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நோபல் பரிசு பெற்ற இந்தியரின் நினைவாக மகனுக்கு சேகர் என்று பெயர் சூட்டிய எலான் மஸ்க்

புதன் 3, டிசம்பர் 2025 8:25:48 AM (IST)



உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளங்களிலும் பரபரப்பாக இயங்குகிறார். எனவே லட்சக்கணக்கானோர் அவரை பின்தொடர்கின்றனர். 

மேலும் தன்னை பின்தொடர்பவர்களுடன் நேரலையில் அவர் உரையாடும்போது வேடிக்கையான கருத்துகளை தெரிவிப்பார். இந்த கருத்துகள் சமூகவலைதளங்களில் வைரலாவதும் உண்டு. இந்தநிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் எலான் மஸ்க் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது தனது தனிப்பட்ட குடும்ப விவரங்களை பகிர்ந்த அவர் தனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், தனது மகன்களில் ஒருவருக்கு சேகர் என பெயர் சூட்டியிருப்பதாகவும் கூறியிருந்தார். இந்திய-அமெரிக்க இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகரின் நினைவாக இந்த பெயரை தாங்கள் சூட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory