» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துள்ளது: அமெரிக்கா
வெள்ளி 24, அக்டோபர் 2025 12:47:53 PM (IST)
அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவுறுத்தலையடுத்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளதாக வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார்.
ரஷியா - உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனால், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் இந்த போரை ஊக்குவிப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.குறிப்பாக, இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில் அந்த நாடுகள் மீது அமெரிக்கா அதிக வரி விதித்து வருகிறது. மேலும், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார். ஆனால், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷியாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன.
இந்நிலையில், டிரம்ப்பின் அறிவுறுத்தலையடுத்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கரோலின் கூறுகையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சீனா குறைத்துக்கொண்டதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, டிரம்பின் வேண்டுகோளை ஏற்று ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளது’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்கு எந்தவிதத் தடையும் இல்லை: நேபாள அரசு விளக்கம்!
வெள்ளி 12, ஜூன் 2026 10:52:52 AM (IST)

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான் ராணுவம்: மீறும் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு..!
வியாழன் 11, ஜூன் 2026 5:27:20 PM (IST)

ஹெலிகாப்டர் விபத்தால் வெடித்த மோதல்: ஈரான் மீது 2-ஆவது நாளாக அமெரிக்கா தாக்குதல்!
வியாழன் 11, ஜூன் 2026 12:31:12 PM (IST)

இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகிக்கும் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து மழை!
புதன் 10, ஜூன் 2026 5:26:56 PM (IST)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் சரமாரி துப்பாக்கிச் சூடு: 30 பேர் பலி, 200பேர் படுகாயம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 5:22:20 PM (IST)

எச்-1பி விசா கட்டண உயர்வு ரத்து: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி - ட்ரம்ப் அரசுக்கு பின்னடைவு!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:26:05 AM (IST)









