» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வர்த்தக போரை விரும்பவில்லை; அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் - சீனா உறுதி

திங்கள் 13, அக்டோபர் 2025 12:02:17 PM (IST)

நாங்கள் வர்த்தக போரை விரும்பவில்லை. ஆனால் அதை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்று சீனா தெரிவித்து உள்ளது.

சீனா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு 145 சதவீத வரியை விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா 110 சதவீத வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகள் இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டது.

பின்னர் அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்ததால் சீனா மீதான வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இதற்கிடையே வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் சீன பொருட்களுக்கு கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் நேற்று அறிவித்தார்.

சீனா தனது அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியில் புதிய கட்டுபாடுகளை விதித்ததையடுத்து அதிருப்தி அடைந்த டிரம்ப், மீண்டும் சீனா மீது கூடுதல் வரி விதிப்பதாக மிரட்டல் விடுத்து உள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம் என்று சீனா தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சீனாவின் வர்த்தக அமைச்சகம் கூறியதாவது: அதிக வரிகள் விதிப்பு என்ற அச்சுறுத்தல்கள் சீனாவுடன் இணைந்து செயல்பட சரியான வழி அல்ல. வர்த்தகப் போரில் எங்கள் நிலைப்பாடு நிலையானது. நாங்கள் வர்த்தக போரை விரும்பவில்லை. ஆனால் அதை பார்த்து நாங்கள் பயப்படவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அந்நாட்டின் இரட்டை தரநிலைகளுக்கு ஒரு பொதுவான எடுத்துக் காட்டு ஆகும்.

இரு தரப்பினருக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சு வார்த்தைகளின் சூழலைக் கடுமையாகப் பாதித்துள்ளன. கடந்த மாதம் முதல் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்கா தனது தவறான நடை முறைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். அமெரிக்கா தவறான வழியில் செல்ல வலியுறுத்தினால், சீனா நிச்சயமாக அதன் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory