» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரான்சில் அரசுக்கு எதிரான போராட்டம் அறிவிப்பு : ஈபிள் கோபுரம் மூடல்!

சனி 4, அக்டோபர் 2025 12:11:40 PM (IST)



பாரிஸில், அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பேரணியைத் தொடங்கியதால்  உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. 

பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க பட்ஜெட்டில் அரசாங்க செலவினங்கள் குறைக்கப்பட்டன. அப்போது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். 

இதற்கிடையே நாட்டின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமிக்கப்பட்டார். ஆனால் இவரது நியமனம் போராட்டத்தை மேலும் தூண்டியது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் ‘அனைத்தையும் தடுப்போம்’ என்ற இயக்கத்தை தொடங்கி, நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் குவிந்தனர்.

இதன் காரணமாக உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை அறியாமல் சென்றிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory