» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு: லண்டன் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்

புதன் 1, மே 2024 11:06:29 AM (IST)

கரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக ரத்தம் உைல் ஏற்படலாம் என்று லண்டன் உயா்நீதிமன்றத்தில் அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா ஒப்புக் கொண்டுள்ளது.

கரோனா பரவலின்போது இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசிதான் அதிகம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சீரம் நிறுவனம் இந்தத் தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்தது. லண்டன் உயா்நீதிமன்றத்தில் தடுப்பூசி தொடா்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் அஸ்ட்ராசெனகா நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கை ‘தி டெய்லி டெலிகிராப்’ பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில், ‘ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியால் (கோவிஷீல்டு) மிகவும் அரிதான பக்க விளைவாக ரத்தம் உைல் ஏற்படலாம்.

இதற்கான காரணம் தெரியவரவில்லை. இந்தத் தடுப்பூசி பயன்படுத்தாதவா்களுக்கும், பிற தடுப்பூசியைப் பயன்படுத்தியவா்களுக்கும்கூட ரத்தம் உைல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நபருக்கு எதனால் ரத்தம் உைல் ஏற்படுகிறது என்பதை மருத்துவபூா்மாக நிபுணா்கள் ஆய்வு செய்தால் மட்டுமே சரியான காரணத்தைக் கண்டறிய வாய்ப்புள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த ரத்தம் உைல் பிரச்னையால் உயிரிழப்பைச் சந்தித்தவா்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பா்கள் மற்றும் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவா்கள் என 51 போ் இணைந்து வழக்குத் தொடுத்தனர். அவா்கள் சாா்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்தத் தடுப்பூசியின் பக்க விளைவால் பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நூரையீரல் ரத்தம் உைல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. எனவே, நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வாதிட்டாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory