» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - பலி 6 ஆக அதிகரிப்பு, மீட்புப் பணி தீவிரம்!
ஞாயிறு 31, மே 2026 8:45:18 PM (IST)

டெல்லியின் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சைதுலாஜாப் பகுதியில் நான்கு மாடி வணிகக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது
டெல்லியின் சைதுலாஜாப் பகுதியில் உள்ள சாகேத் மெட்ரோ நிலையம் அருகே சனிக்கிழமை (மே 30) மாலை நான்கு மாடி வணிகக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. சைதுலாஜாப் வெஸ்டர்ன் மார்க் பகுதியில் உள்ள இந்த வணிகக் கட்டிடத்தில் மாணவர் தங்குமிடங்கள், பயிற்சி மையங்கள் இயங்கி வந்துள்ளன சைதுலாஜாபில் உள்ள வெஸ்டர்ன் மார்க்கில், பல்வேறு பேயிங் கெஸ்ட் தங்குமிடங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் மாணவர் உணவகங்கள் உள்ள இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சனிக்கிழமை இரவு கட்டிடம் இடிந்து விழுந்ததாக வந்த தகவலையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்புத் துறை மற்றும் டெல்லி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இரவு முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே சனிக்கிழமை மாலையில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க இரவு முழுவதும் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்புத் துறை, டெல்லி காவல்துறை, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், டெல்லி மாநகராட்சி, குடிமைப் பாதுகாப்பு மற்றும் கேட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை ஈடுபட்டுள்ளன., சனிக்கிழமை இரவு 7:44 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து டெல்லி பேரிடர் மீட்புப் படைக்கு அழைப்பு வந்துள்ளது. இதன்பின்னர் உடனடியாக மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை விரைவாக மீட்க கனரக இயந்திரங்கள், ஹைட்ராலிக் கட்டர்கள், ஜிபிஎஸ் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் காயமடைந்து மீட்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இன்று அதிகாலை வரை இடிபாடுகளிலிருந்து 9 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் எட்டு பேர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ரவி என்ற நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால், அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுகவிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:15:29 PM (IST)

உஜ்வாலா மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு: பயனாளிகளுக்கு அதிர்ச்சி!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:40:06 AM (IST)

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்: இண்டியா கூட்டணி வலியுறுத்தல்
செவ்வாய் 9, ஜூன் 2026 10:18:50 AM (IST)

செய்தித்தாள்களில் உணவுகளை மடித்து வழங்கினால் அதிரடி நடவடிக்கை! – FSSAI எச்சரிக்கை!
திங்கள் 8, ஜூன் 2026 5:11:07 PM (IST)

டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை: ராகுல் காந்திக்கு எதிராகப் பரபரப்பு பேனர்கள்!
திங்கள் 8, ஜூன் 2026 11:36:10 AM (IST)

ரூ.6,000 சம்பளத்திலிருந்து கோடிக் கணக்கில் சொத்து குவிப்பு: விசாரணையில் சிக்கிய அரசுப் பொறியாளர்!
திங்கள் 8, ஜூன் 2026 10:46:58 AM (IST)









