» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மம்முட்டி, மாதவன் உள்ளிட்ட 65 பேருக்கு பத்ம விருதுகள் குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்!

புதன் 24, ஜூன் 2026 11:14:06 AM (IST)



டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இரண்டாம் கட்டமாக, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, நடிகர் மாதவன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் உள்ளிட்ட 65 பேருக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கியுள்ளார்.

கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய உயரிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை (5 பத்ம விபூஷண், 13 பத்மபூஷண், 113 பத்மஸ்ரீ என மொத்தம் 131 விருதுகள்) மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இதில் முதற்கட்டமாகச் கடந்த மாதம் 25-ஆம் தேதி 66 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட விருது வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் நேரில் பங்கேற்றனர். விழாவில், இந்தியக் கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, நடிகர்கள் மம்முட்டி, மாதவன், டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் மற்றும் சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் உள்ளிட்ட 65 பேருக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கித் தேசத்தின் சார்பில் கவுரவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory