» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழக டிஜிபி நியமனம்: மார்ச் 20-ல் ஆலோசனைக் கூட்டம் - யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 13, மார்ச் 2026 12:23:23 PM (IST)
தமிழகத்தின் புதிய டிஜிபி-யைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தை மார்ச் 20-ம் தேதி நடத்தி, தகுதியானவர்களின் பட்டியலை விரைந்து மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வுபெற்ற நிலையில், தமிழக அரசு தற்காலிக (பொறுப்பு) டிஜிபி-யாக சங்கர் வெங்கட்ராமனை நியமித்தது. "மாநில அரசுகள் டிஜிபி-யைத் தேர்வு செய்ய மூன்று மாதங்களுக்கு முன்பே பட்டியலை அனுப்ப வேண்டும்; தற்காலிக டிஜிபி-யை நியமிக்கக் கூடாது" என்ற 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு மீறிவிட்டதாகக் கூறி, மதுரையைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் ஹென்றி திபேன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது தெலங்கானா டிஜிபி தேர்வுக்கான கூட்டம் மார்ச் 11-ல் நடைபெற்றது. குஜராத் டிஜிபி தேர்வுக்கான கூட்டம் மார்ச் 19-ல் நடைபெறவுள்ளது. தமிழக டிஜிபி தேர்வுக்கான கூட்டம் மார்ச் 20-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று யுபிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி. வில்சன் மற்றும் முகுல் ரோத்தகி ஆகியோர், டிஜிபி நியமன நடைமுறைகள் தொடங்கப்பட்டுவிட்டதால், அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கக் கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். இருப்பினும், தமிழக டிஜிபி நியமனத்திற்கான பட்டியலை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று யுபிஎஸ்சி-க்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார் முதல்வர் ச.ஜோசப் விஜய்!
புதன் 10, ஜூன் 2026 5:46:14 PM (IST)

பாரதிராஜா மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு : சந்திரபாபு நாயுடு இரங்கல்!
புதன் 10, ஜூன் 2026 5:11:50 PM (IST)

வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறுவோம் – பிரதமர் மோடி உறுதி!
புதன் 10, ஜூன் 2026 12:23:27 PM (IST)

அரசுப் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம் : தெலங்கானா கிராம மக்கள் அதிரடித் தீர்மானம்!
புதன் 10, ஜூன் 2026 12:13:28 PM (IST)

அதிமுகவிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:15:29 PM (IST)

உஜ்வாலா மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு: பயனாளிகளுக்கு அதிர்ச்சி!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:40:06 AM (IST)









