» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதி

புதன் 11, மார்ச் 2026 11:53:28 AM (IST)

சர்வதேச அரசியல் சூழல்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் வீட்டு உபயோக எரிவாயு (LPG) சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, உலக நாடுகளுக்கான முக்கிய சரக்குக் கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் உலக அளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அண்மையில் எரிவாயு விலை உயர்ந்ததுடன், சில இடங்களில் வர்த்தக ரீதியிலான சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்தச் சூழலில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது: "இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு எதுவும் இல்லை. நாம் பல்வேறு நாடுகளிலிருந்தும், மாற்று வழிகளிலும் எரிபொருளைத் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறோம். எனவே, விநியோகச் சங்கிலியில் எவ்விதப் பாதிப்பும் இல்லை."

இந்தியாவில் சி.என்.ஜி (CNG) மற்றும் பி.என்.ஜி (PNG) ஆகிய வீட்டு உபயோக எரிவாயு விநியோகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. போர்ச் சூழல் நிலவினாலும், தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் விநியோகம் 70% முதல் 80% வரை தடையின்றித் தொடரும்.

சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றத்தால் எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்படும் என எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சரின் இந்த அறிக்கை அமைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory