» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராஜஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
திங்கள் 16, பிப்ரவரி 2026 12:14:44 PM (IST)

ராஜஸ்தான் மாநிலம் பிவாடி நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிவாடி நகரில் குஷ்கேரா-கரோலி தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. வழக்கமான ரோந்துப் பணியில் இருந்த போலீசார் தீ விபத்தைக் கண்டு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை ஏழு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தத் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்துப் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிபத்து குறித்து கூடுதல் மாவட்ட ஆட்சியர் சுமிதா மிஸ்ரா இது குறித்துத் தெரிவிக்கையில், "விபத்தின் போது மொத்தம் 9 பேர் உள்ளே சிக்கியிருந்தனர். மீதமுள்ள இரண்டு தொழிலாளர்களை மீட்பதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்துப் பேசினார் முதல்வர் ச.ஜோசப் விஜய்!
புதன் 10, ஜூன் 2026 5:46:14 PM (IST)

பாரதிராஜா மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு : சந்திரபாபு நாயுடு இரங்கல்!
புதன் 10, ஜூன் 2026 5:11:50 PM (IST)

வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறுவோம் – பிரதமர் மோடி உறுதி!
புதன் 10, ஜூன் 2026 12:23:27 PM (IST)

அரசுப் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளை சேர்ப்போம் : தெலங்கானா கிராம மக்கள் அதிரடித் தீர்மானம்!
புதன் 10, ஜூன் 2026 12:13:28 PM (IST)

அதிமுகவிலிருந்து விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!
செவ்வாய் 9, ஜூன் 2026 4:15:29 PM (IST)

உஜ்வாலா மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைப்பு: பயனாளிகளுக்கு அதிர்ச்சி!
செவ்வாய் 9, ஜூன் 2026 10:40:06 AM (IST)









