» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் அமராவதி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

செவ்வாய் 11, ஜூன் 2024 5:22:31 PM (IST)

ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு புதன்கிழமை பதவியேற்கவுள்ள நிலையில், விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்எல்ஏக்களின் கூட்டத்தில் இதனை அறிவித்தார். மேலும், விசாகப்பட்டினம் பொருளாதார தலைநகராகவும், மேம்பட்ட சிறப்பு நகரமாகவும் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏக்களின் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: "அமராவதி, ஆந்திரத்தின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை மேற்கொள்வோம், பழிவாங்கும் அரசியலை அல்ல. விசாகப்பட்டினம் மாநிலத்தின் வணிகத் தலைநகராக இருக்கும். மூன்று தலைநகர்களை உருவாக்க முயற்சிப்பது போன்ற விளையாட்டுகளை நாங்கள் விளையாட மாட்டோம். போலாவரம் திட்டத்தை நிறைவேற்றுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும் அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும் கர்னூலை நீதித்துறை தலைநகராகவும் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். ஜெகன் மோகம் ரெட்டி அரசின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அமராவதியை தலைநகராக உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது அமராவதியை தலைநகராக்குவேன் என்று வாக்குறுதி அளித்த சந்திரபாபு நாயுடு, பதவியேற்பதற்கு முன்னதாகவே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory