» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிர்மலா சீதாராமனுக்கு ஆடவும், பாடவும் மட்டுமே தெரியும்: சு.சுவாமி விமர்சனம்!

புதன் 24, ஜூலை 2024 12:40:05 PM (IST)



மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆடவும், பாடவும் மட்டுமே தெரியும் என்று பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நேற்று (ஜூலை 23) மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவும், விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன. ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்த மத்திய அரசின் பட்ஜெட்ஜெகதீஷ் ஷெட்டி என்பவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பட்ஜெட் மீதான விமர்சனத்தைப் பகிர்ந்திருந்தார். 

அதற்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி , "பட்ஜெட் விவகாரத்தில் நிதியமைச்சரைக் குற்றம் சொல்வது தவறு. இந்த பட்ஜெட் பிரதமர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால், அந்த முட்டாள்கள் ஒரு அடையாளத்திற்காக நிர்மலாவிடம் கொடுத்துவிட்டனர். அவர் ஜவஹர்லால் நேரு பல்கலையின் முன்னாள் மாணவர். அதாவது, அவருக்கு ஆடவும் பாடவும் மட்டுமே தெரியும்” என்று விமர்சித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors


CSC Computer Education






Thoothukudi Business Directory