» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மும்பையில் பூட்டிய வீட்டில் பிரபல நடிகை சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை!
திங்கள் 10, ஜூன் 2024 5:50:16 PM (IST)
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை மலபிகா தாஸ் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை கஜோல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தி டிரையல் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நூர் மலபிகா தாஸ் மிகவும் பிரபலமானார். நூர் மலபிகா தாஸ் சினிமா துறைக்கு வருவதற்குமுன் கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றினார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த நூர் மலபிகா தாஸ் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், மலபிகா தாஸ் தங்கி இருந்த வீட்டில் கடந்த சில நாட்களாக பூட்டி இருந்த நிலையில் வீட்டில் இருந்து இன்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு நடிகை மலபிகா தாஸ் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் நடிகை மலபிகா தாஸ் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டில் நடிகை பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இந்தி திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் அரசியல் அமைப்புக்கு எதிரானது: பரூக் அப்துல்லா
செவ்வாய் 8, ஜூலை 2025 4:39:15 PM (IST)

ரியல் எஸ்டேட் மோசடி: நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய் 8, ஜூலை 2025 3:41:11 PM (IST)

அரசு பங்களாவை 2 வாரத்தில் காலி செய்து விடுவேன்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
திங்கள் 7, ஜூலை 2025 4:45:26 PM (IST)

பீகார் தொழிலதிபர் சுட்டுக்கொலை: இறுதிச் சடங்குக்கு வந்த குற்றவாளி கைது!
திங்கள் 7, ஜூலை 2025 11:48:28 AM (IST)

கன்னட மொழி பற்றி பேச நடிகர் கமல்ஹாசனுக்கு தடை: பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:09:32 AM (IST)

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)
