» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

யாரையும் சிறப்பு அந்தஸ்து உள்ள குடிமக்களாக ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை : மோடி

திங்கள் 20, மே 2024 3:28:28 PM (IST)

"யாரையும் சிறப்பு அந்தஸ்து உள்ள குடிமக்களாக ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை, அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருவதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி, "சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை, காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராகத்தான் பேசுகிறேன் என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது, அதைத்தான் நான் கூறி வருகிறேன். பாஜக சிறுபான்மையினருக்கு எதிராக இருக்காது, இப்போது மட்டுமல்ல வரும் காலங்களிலும்கூட.

கர்நாடகத்தில் அனைத்து முஸ்லிம் மக்களையும் ஓபிசி பிரிவுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வர காங்கிரஸ் முயற்சிக்கிறது. நமது அரசியல் சாசனத்தில் உள்ள மதச்சார்பின்மை உணர்வை தங்களின் தேர்தல் அரசியலுக்காக அழித்தவர்கள் இவர்கள்தான் என்று நான் நம்புகிறேன். அரசியலமைப்பின் உணர்வை மீட்டெடுக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களவைத் தேர்தல் முடிவு குறித்து பேசிய பிரதமர் மோடி, "2019 தேர்தல் முடிவுகளின்படி, தென் மாநிலங்களிலும் பாஜகதான் பெரிய கட்சி, இந்த முறையும் நாங்கள்தான் பெரிய கட்சியாக வருவோம், கூட்டணிக் கட்சிகள் கூடுதல் பலம் சேர்க்கும். தெற்கு, கிழக்கு உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கூடுதல் வெற்றிகளை பெறுவோம்.

காங்கிரஸ் கூட்டணி சில மாநிலங்களில் வெற்றிக் கணக்கை தொடங்கவே திணறிக் கொண்டுள்ளது. 400 தொகுதிகளை கைப்பற்றுவதே எங்கள் இலக்கு. 4-ஆம் கட்ட தேர்தல் முடிவில் எங்கள் மதிப்பீடு சரி என்பது உறுதியாகியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory