» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

செவ்வாய் 14, மே 2024 5:44:46 PM (IST)

தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது. அடுத்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. வருகிற 19-ந்தேதி தெற்கு அந்தமான் கடல், வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

அதனை தொடர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரியான நேரத்தில் பருவமழை தொடங்கும். ஜூன் 1-ந்தேதி கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி விடும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.தென்மேற்கு பருவமழையின்போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory