» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜே.இ.இ. முதன்மை தேர்வு: 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்!!

வியாழன் 25, ஏப்ரல் 2024 4:48:06 PM (IST)

ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று  முதலிடம் பிடித்துள்னர். 

நாட்டில் உள்ள 23 இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி) என்.ஐ.டி.யில் சேருவதற்கு ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. என்.ஐ.டி.யில் சேர ஜே.இ.இ. முதன்மை தேர்வில் பங்கேற்பதும், ஐ.ஐ.டி. யில் சேர 2-ம் கட்ட ஜே.இ.இ. உயர்நிலை (அட்வான்ஸ்ட்) தேர்வில் பங்கேற்பதும் அவசியமாகும்.

இரு தாள்கள் அடங்கிய ஜே.இ.இ.முதன்மைத் தேர்வு இரு பதிப்புகளாக நடத்தப்படுகிறது. இரண்டு பதிப்பு தேர்வுகளுக்கு பிறகு அவ்விரு மதிப்பெண்களில் சிறந்ததை கருத்தில் கொண்டு தேர்வர்களின் தர வரிசை வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதல் பதிப்பு தேர்வு ஜனவரி-பிப்ரவரியில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. 

இந்த மாதத்தில் நடந்த இரண்டாம் பதிப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 10 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 56 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தெலுங்கானாவை சேர்ந்த 15 மாணவர்கள், மராட்டியம் மற்றும் ஆந்திராவில் இருந்து தலா 7 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

முதலிடம் பெற்ற 56 பேரில் 40 பேர் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள். ஓ.பி.சி. பிரிவில் 10 பேர் மற்றும் ஜென் - இ.டபில்யூ எஸ் பிரிவில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.சி., எஸ்.டி. பிரிவை சேர்ந்த யாரும் முழு மதிப்பெண்களை பெற முடியவில்லை.

இத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 மாணவர்கள் 3 ஆண்டு காலம் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொள்கையின்படி இரண்டு தேர்வு மதிப்பெண்களின் சிறந்ததை கருத்தில் கொண்டு மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகின்றன. அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில் தெலுங்கானா மாநிலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முன்னிலையில் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory