» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: களம் காணும் 8 மத்திய அமைச்சர்கள், 3 மாஜி முதல்வர்கள்!!
வியாழன் 18, ஏப்ரல் 2024 12:39:07 PM (IST)

18-வது மக்களவைத் தேர்தலில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 102 தொகுதிகளில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் முதல்வர்கள் களம் காண்கின்றனர்.
நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் 39, புதுச்சேரியின் 1 தொகுதியிலும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்! நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்: அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஜம்மு மற்றும் காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி.
எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில் வாக்குப் பதிவு?:
1) அருணாச்சல பிரதேசம்- 2 (மொத்தம் 2)
2) அஸ்ம்: 5 (மொத்தம் 14)
3) பீகார்: 4 (மொத்தம் 40)
4) சத்தீஸ்கர்: 1 (மொத்தம் 11)
5) மத்தியப் பிரதேசம்: 6 (மொத்தம் 29)
6) மகாராஷ்டிரா: 5 (மொத்தம் 48 )
7) மணிப்பூர்: 2 (மொத்தம் 2)
8) மேகாலயா: 2 (மொத்தம் 2)
9) மிசோரம்: 1 (மொத்தம் 1)
10) நாகாலாந்து: 1 (மொத்தம் 1)
11) ராஜஸ்தான்: 12 (மொத்தம் 25)
12) சிக்கிம்: 1 (மொத்தம் 1)
13) தமிழ்நாடு: 39 (மொத்தம் 39)
14) திரிபுரா: 1 (மொத்தம் 2)
15) உத்தரபிரதேசம்: 8 (மொத்தம் 80)
16) உத்தரகாண்ட்: 5 (மொத்தம் 5)
17) மேற்கு வங்கம்: 3 (மொத்தம் 42)
18) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்: 1 (மொத்தம் 1)
19) ஜம்மு காஷ்மீர்: 1 (மொத்தம் 5)
20) லட்சத்தீவு: 1 (மொத்தம் 1)
21) புதுச்சேரி: 1 (மொத்தம் 1)
களம் காணும் மத்திய அமைச்சர்கள்
1) நிதின் கட்காரி (நாக்பூர், மகாராஷ்டிரா
2) கிரென் ரிஜுஜூ (அருணாச்சல் மேற்கு, அருணாச்சல பிரதேசம்)
3) சர்பானந்த சோனோவால் (திப்ரூகர், அஸ்ஸாம்)
4) சஞ்சீவ் பல்யான் (முசாபர்நகர், உத்தரப்பிரதேசம்)
5) எல்.முருகன் (நீலகிரி, தமிழ்நாடு)
6) ஜிதேந்திர சிங் (உதம்பூர், ஜம்மு காஷ்மீர்)
7) பூபேந்திர யாதவ்( அல்வார், ராஜஸ்தான்)
8 ) அர்ஜூன் மேக்வால் (பிகானீர், ராஜஸ்தான்)
களம் காணும் முன்னாள் முதல்வர்கள்
பாஜகவிற்கு 1 முறை வாக்களித்தால்.. 2 ஓட்டு விழுந்தது எப்படி? தேர்தல் ஆணையத்தை வளைத்த உச்ச நீதிமன்றம் பாஜகவிற்கு 1 முறை வாக்களித்தால்.. 2 ஓட்டு விழுந்தது எப்படி? தேர்தல் ஆணையத்தை வளைத்த உச்ச நீதிமன்றம்
1) ஓ.பன்னீர்செல்வம்( தமிழ்நாடு) ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக கூட்டணி ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி, அதிமுகவின் ஜெயபெருமாள் போட்டியிடுகின்றனர்.
2) நபம் துகி, (அருணாச்சல பிரதேசம்) அருணாச்சல பிரதேசம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூவை எதிர்த்து களம் காண்கிறார் நபம் துகி.
3) பிப்லாப் குமார் தேப் (திரிபுரா) , மேற்கு திரிபுரா தொகுதியில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஷிஸ் குமார் ஷாகாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.
களம் காணும் மாஜி ஆளுநர்:
முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் தென் சென்னை ( தமிழ்நாடு) லோக்சபா தொகுதியில் தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்- பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்க பாண்டியன், அதிமுகவின் ஜெயவர்தன் போட்டியிடுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக் கூடாது: பிரதமருக்கு, ஜெகன் மோகன் கடிதம்
சனி 22, மார்ச் 2025 12:52:18 PM (IST)

செயலற்ற மொபைல் எண்களின் யுபிஐ சேவை ஏப். 1 முதல் நிறுத்தம்: என்பிசிஐ அறிவிப்பு!
சனி 22, மார்ச் 2025 12:11:56 PM (IST)

தங்கள் ஊழலை மறைக்கவே மொழி பிரச்சினையை கிளப்புகிறார்கள் : தி.மு.க. மீது அமித்ஷா தாக்கு
சனி 22, மார்ச் 2025 8:44:22 AM (IST)

உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது!
சனி 22, மார்ச் 2025 8:40:41 AM (IST)

சூதாட்ட செயலி விளம்பரம்: பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உள்பட 25 பேர் மீது வழக்கு
வெள்ளி 21, மார்ச் 2025 11:37:12 AM (IST)

கொச்சி விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி கஞ்சா பறிமுதல்: மாடல் அழகி உள்பட 2 பெண்கள் கைது!
வியாழன் 20, மார்ச் 2025 7:44:02 PM (IST)
