» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக பாஜக முடக்குகிறது : ப. சிதம்பரம் குற்றச்சாட்டு!

சனி 30, மார்ச் 2024 3:58:53 PM (IST)

காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும்  மத்திய பாஜக அரசு முடக்குகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஒரு கட்சி பல ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டுள்ள நிலையில், மற்றொரு கட்சி கடுமையான வரிக் கோரிக்கைகளை எதிர்கொள்ளும் போது, தோ்தல்கள் சுதந்திரமான மற்றும் நியாயமாகவும் நடத்தப்படும் என்று நாம் எவ்வாறு கூற முடியும்? ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல.

நமது ஜனநாயக நாட்டில் மிகப் பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் தேர்தலுக்கு முன்பு மத்திய பாஜக அரசால் முடக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்கும் போலி முயற்சிகளே அன்றி வேறில்லை, ஆனால் இந்த வித்தையால் பாஜகவுக்கு எதிராக நாங்கள் பயப்பட மாட்டோம், வரும் தேர்தலில் இந்த நாட்டு மக்கள் பாஜகவுக்கு அனைத்து பதில்களையும் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

பாஜகவின் 8,250 கோடி தோ்தல் நன்கொடை பத்திரங்கள் ஊழல் நாட்டையே உலுக்கியது. ஆளும் கட்சி தங்கள் நண்பர்களின் நிதியை ஆதரிக்கும் போது, வருமான வரித்துறை வசதியாக காங்கிரஸை குறிவைத்து மற்றொரு ரூ.1,823 கோடி அபராதம் செலுத்துமாறு காங்கிரஸுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

5 நிதியாண்டுகளுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ்

1993-94-ஆம் நிதியாண்டுக்கான காங்கிரஸின் வருமான வரிக் கணக்கில் கண்டறியப்பட்ட தவறுக்காக ரூ.54 கோடி அபராதம் , 2016-17-ஆம் நிதியாண்டுக்கான அபராதம் ரூ.182 கோடி, 2017-18-ஆம் நிதியாண்டுக்கான அபராதம் ரூ.179 கோடி, 2018-19-ஆம் ஆண்டுக்கான அபராதம் ரூ.918 கோடி, 2019-20-ஆம் நிதியாண்டுக்கான அபராதம் ரூ.490 கோடி என மொத்தம் ரூ.1,823 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது கவனிக்கத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory