» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடற்கொள்ளையர்களிடம் இருந்து 23 மீனவர்கள் மீட்பு: இந்திய கடற்படை தகவல்

சனி 30, மார்ச் 2024 12:36:48 PM (IST)

சோகோட்ரா தீவுக்கு அருகே கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்ற பணய கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 

ஏமன் நாட்டின் சோகோட்ரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த ஈரான் நாட்டுக்குச் சொந்தமான அல் கம்பார் 786 என்ற மீன்பிடிக்கப்பலை நேற்று முன்தினம் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரையும் பணய கைதிகளாகப் பிடித்தனர்.

கப்பல் கடத்தப்பட்டது குறித்த தகவல் கிடைத்ததும் அரபிக்கடலில் ரோந்து பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் உடனடியாக அங்கு விரைந்தன. கடத்தப்பட்ட ஈரான் கப்பலை இந்திய கடற்படையின் கப்பல் நேற்று சுற்றிவளைத்தன. ஈரான் கப்பலில் பயங்கர ஆயுதங்களுடன் 9 கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்தும் கப்பலையும், பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள மாலுமிகளையும் மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்கள் சரண் அடைந்தனர். கப்பலில் இருந்த 23 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்.

இதுதொடர்பாக இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், கப்பல் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அதிரடி நடவடிக்கை எடுத்து 23 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளோம் என தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory