» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுகாதார நல மையங்கள் ஆயுஷ்மான் பாரத் ஆரோக்ய மந்திர் என்று பெயர் மாற்றம்!

செவ்வாய் 28, நவம்பர் 2023 11:18:11 AM (IST)

சுகாதார நல மையங்களை ஆயுஷ்மான் பாரத் ஆரோக்ய மந்திர் என்று மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. 

ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களை 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய அரசு, 'ஆயுஷ்மான் பாரத்' என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ், 'ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்' அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த மையங்களின் பெயரை 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பெயர் மாற்றத்தை அமல்படுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. பெயர் மாற்றப்பட்ட மையங்களின் புகைப்படத்தை, 'ஆயுஷ்மான் பாரத்-சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory