» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குஜராத்தில் இடி - மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழப்பு: 71 கால்நடைகள் பலி!

திங்கள் 27, நவம்பர் 2023 5:54:28 PM (IST)

குஜராத்தில் மழையால், மின்னல் தாக்கி 24 பேர் உயிரிழந்தனர். மேலும், 71 கால்நடைகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத் அவசரகால செயல்பாட்டு மைய அதிகாரி தெரிவித்த தகவலின்படி, ஆமதாபாத், அம்ரேலி, ஆனந்த், கெடா, தேவபூமி துவாரகா, பஞ்சமஹால், படான், பொடாட், மெஹ்சானா, சபர்கந்தா, சூரத் மற்றும் சுரேந்திரநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தபி மாவட்டத்தில் மின்னல் பாய்ந்து இருவர் பலியாகியுள்ளனர்.பனஸ்கந்தா மற்றும் பருச் மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து தலா 3 பேரும், தாஹோத் மாவட்டத்தில் 4 பேரும் பலியானதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

குஜராத்தில் மின்னல் பாய்ந்து மொத்தம் 24 பேர் பலியாகியுள்ளனர், 23 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்ததன் அடிப்படையில், காந்திநகர் மற்றும் கிர் சோம்நாத் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை 38 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஜூனாகத்தில் 35 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அமரேலியில் 13 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory