» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

வியாழன் 25, மே 2023 3:29:50 PM (IST)

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்து வைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தில்லியில் புதிய நாடளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 28 ஆம் தேதி திறந்துவைக்கிறார். இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

இது குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முக்கு பெரும் அவமதிப்பு என்பதுடன் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன. இதனால் நாடளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்துவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யபட்டுள்ளது.புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரே திறந்து வைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் உச்சநீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory