» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உளவுத்துறை இயக்குனர் வீட்டில் சிஆர்பிஎப் எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சனி 4, பிப்ரவரி 2023 11:54:11 AM (IST)
டெல்லியில் மத்திய உளவுத்துறை இயக்குனர் வீட்டில் பணியில் இருந்த சிஆர்பிஎப் சப் - இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மத்திய உளவுத்துறை இயக்குனராக பணியாற்றி வருபவர் தபன் டிகா. இவரது அரசு பங்களா டெல்லி துக்ளக் சாலையில் உள்ளது. இங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உளவுத்துறை இயக்குனர் வீட்டில் நேற்று மாலை சிஆர்பிஎப் துணை சப் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜ்பிர் சிங் (53) என்ற அந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது: அனுராஜ் சிங் தாக்கூர் விளக்கம்
செவ்வாய் 21, மார்ச் 2023 5:09:40 PM (IST)

மத்திய அரசைக் கண்டித்து 29-ந்தேதி போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 3:16:01 PM (IST)

போலீசை அனுப்பி என்னை அச்சுறுத்த முடியாது: ராகுல்காந்தி
செவ்வாய் 21, மார்ச் 2023 10:21:18 AM (IST)

ராமர் பாலம் வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்பிரமணியன் சுவாமி முறையீடு!
செவ்வாய் 21, மார்ச் 2023 10:17:58 AM (IST)

மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் 14 நாள் காவல் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 20, மார்ச் 2023 5:01:41 PM (IST)

ராகுல் காந்தி வீட்டில் டெல்லி போலீசார் திடீர் விசாரணை : காங். தொண்டர்கள் திரண்டனர்!
ஞாயிறு 19, மார்ச் 2023 8:01:40 PM (IST)
