» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய கடல் பகுதியில் நுழைந்த சீன உளவு கப்பல்

புதன் 7, டிசம்பர் 2022 12:19:32 PM (IST)சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்கிற உளவு கப்பல் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த சீனா முயன்று வருகிறது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக பிராந்தியத்தில் உள்ள பிறநாடுகளுடன் இந்தியா தனது ராணுவ உறவுகளை பலப்படுத்தி வருகிறது. ஆனாலும் சீனா ராணுவ மற்றும் ஆராய்ச்சி கப்பல்கள் அவ்வப்போது இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கடற்படை தளபதி ஹரி குமார் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்களின் நடமாட்டம் பெருகி வருவதாகவும், அவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் சீனாவின் 'யுவான் வாங்-5' என்கிற உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான 'யுவான் வாங்-5' கப்பல் கடைசியாக இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் காணப்பட்டதாகவும், தற்போது அந்த கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதே சமயம் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல் இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து இந்தியா தரப்பில் ஆதிகாரபூர்வமான எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.

அதே போல் சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் வந்திருப்பதாக கூறப்படும் நிலையில் திட்டமிடப்படி இந்தியா ஏவுகணை சோதனையை நடத்துமா என்பதும் தெளிவாக தெரியவில்லை. முன்னதாக சீனாவின் இந்த உளவு கப்பல் கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் ஒரு வார காலம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory