» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கருக்கலைப்பு குறித்து தாய் எடுக்கும் முடிவே இறுதியானது: டெல்லி உயர்நீதிமன்றம்

செவ்வாய் 6, டிசம்பர் 2022 4:36:07 PM (IST)

கருக்கலைப்பு குறித்து தாய் எடுக்கும் முடிவே இறுதியானது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

டெல்லியைச் சேர்ந்த 26 வயது பெண் தனது 33 வார கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கருவில் உள்ள குழந்தைக்கு பெருமூளையில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் குழந்தையின் நலன் கருதி கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மருத்துவர்கள் மறுத்த போதிலும் பெண்ணின் 33 வார கருவைக் கலைக்க அனுமதி வழங்கி இந்தியாவில் கருக்கலைப்பு குறித்து பெண் முடிவு செய்ய சட்டத்தில் அதிகாரம் உண்டு என்று தெரிவித்தார்.

'கருவை கலைப்பது குறித்த கர்ப்பிணி  பெண்ணின் உரிமை உலகம் முழுவதும் விவாதப் பொருளாக உள்ளது. கருக்கலைப்பு விவகாரத்தில் தாய் எடுக்கும் முடிவே இறுதியானது. ஒரு பெண்ணின் பிரசவ விருப்பத்தையும், பிறக்காத குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அங்கீகரிக்க வேண்டும்.

ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புகிறாளா என்ற இறுதித் தேர்வு அந்தப் பெண்ணிடமே உள்ளது. இதனை சட்டத்தின் மூலமாக அங்கீகரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதுபோல கருக்கலைப்புக்கு மருத்துவக்குழுவின் கருத்தும் முக்கியமானதுதான். குழந்தையின் நலன் கருதி இந்த கருத்துகள் விரிவானதாக இருக்க வேண்டும். இதுபோன்ற விஷயத்தில் தரமான அறிக்கைகளுடன் வேகமும் முக்கியம்' என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory