» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளத்தில் காட்டுத்தீ போல கரோனா வைரஸ் பரவுகிறது - முதல்வர் பினராயி விஜயன் வேதனை

வெள்ளி 23, அக்டோபர் 2020 3:44:21 PM (IST)

கேரளத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 7482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனா தொற்று காட்டுத்தீ போல செயல்படுகிறது என முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

இந்தியாவில் கரோனா தொற்று பரவிய துவக்கத்தில் கேரளாவில் வைரஸ் தொற்று சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது. கேரளா கரோனாவைக் கட்டுப்படுத்திய விதம் உலக அளவில் பாராட்டப்பட்டது. ஆனால், கடந்த சில வாரங்களாக அந்த மாநிலத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்திய அளவில் அதிக தொற்று பரவல் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தற்போது கேரளா உள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "கரோனா தொற்று காட்டுத்தீ போல செயல்படுகிறது. காட்டுத்தீ அணைந்து விட்டது போல தோன்றும். ஆனால், திடீரெனெ மீண்டும் வேகமாக கொழுந்து விட்டு எரியும். அதுபோலவே, கரோனாவும் வீரியம் கொண்டு செயல்படுகிறது. எனவே, எந்த தளர்வுகளும் இருக்காது. மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். 

கரோனா பாதிப்பு ஏற்படட்டும் என்ற எண்ணத்தில் மக்கள் சிலர் இருப்பதாக தெரியவருகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் கரோனா குணம் அடைந்த பிறகும் ஏற்படும் சிக்கல்களை புறந்தள்ளிவிட முடியாது. கரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களில் ஒரு சதவிதத்தினர் பிந்தைய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். கரோனா முடிவுகள் நெகட்டிவ் என வந்த பிறகும் 10 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருப்பது கட்டயம் ஆகும்” என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications



Black Forest Cakes






Thoothukudi Business Directory