அனிருத் இசையில் கமல் பாடியுள்ள விக்ரம் படத்தின் முதல் பாடல்!

Sponsored Ads


அனிருத் இசையில் கமல் பாடியுள்ள விக்ரம் படத்தின் முதல் பாடல்!
பதிவு செய்த நாள் வியாழன் 12, மே 2022
நேரம் 10:16:55 AM (IST)

கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் விக்ரம் படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடல் வெளியிடப்பட்டுள்ளது. கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. 8 மாதங்களில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அனிருத் இசையமைக்கும் படத்திற்கு க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், அனிருத் இசையில், கமல்ஹாசன் பாடியுள்ள பத்தல பத்தல என்ற முதல் பாடல் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமான ரசிகர்களால் கண்டுகளிக்கப்பட்டுள்ளது. படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.Thoothukudi Business Directory