மூன்றாவது கண்: விக்ரம் நடித்துள்ள விழிப்புணர்வு குறும்படம்
மூன்றாவது கண்: விக்ரம் நடித்துள்ள விழிப்புணர்வு குறும்படம்
பதிவு செய்த நாள் | செவ்வாய் 18, செப்டம்பர் 2018 |
---|---|
நேரம் | 4:34:51 PM (IST) |
சென்னையில் குற்றங்களை தடுக்கவும், குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் போலீஸாருக்கு பெரிதும் உதவி வருகின்றன. எனவே, சென்னை மாநகர் முழுவதும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 4 -ஆம் தேதி நடிகர் விவேக் நடித்த மூன்றாவது கண் குறும்படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது கண் விழிப்புணர்வு குறும்படத்தின் இரண்டாவது பகுதி வெளியிடப்பட்டது. இந்த குறும்படத்தில் நடித்த நடிகர் விக்ரம், விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் குறும்பட சி.டி.யை வெளியிட்டார்.