ஷங்கர் இயக்கத்தில் 2.0 உருவான விதம் - வீடியோ

Sponsored Ads


ஷங்கர் இயக்கத்தில் 2.0 உருவான விதம் - வீடியோ
பதிவு செய்த நாள் சனி 26, ஆகஸ்ட் 2017
நேரம் 5:14:57 PM (IST)

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘2.ஓ’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஜனவரி மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் மேக்கிங் டீசரை இயக்குனர் ஷங்கர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை வெளியிட்டார். 1.47 நிமிடம் மட்டுமே ஓடக் கூடிய இந்த மேக்கிங் டீசர் வெளியான அடுத்த நிமிடமே சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியது.Thoothukudi Business Directory