» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
சிறுபான்மையின தொண்டு நிறுவனங்களைக் குறிவைப்பதா? - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, ஏப்ரல் 2026 12:01:05 PM (IST)
கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற மதச் சிறுபான்மையின அமைப்புகளை முடக்கும் நோக்கில் கொண்டு வரப்படவுள்ள 'வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "ஒன்றிய பாஜக அரசால் முன்மொழியப்பட்டுள்ள 'வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026' என்பது முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள், தேவாலயங்கள் மற்றும் பிற மதச் சிறுபான்மையின அமைப்புகளைக் குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும்.ஏற்கனவே வக்பு வாரியச் சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமியச் சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்ற பாஜக அரசு, தற்போது மற்ற மதச் சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்தாலும், கேரளாவில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் தற்போது தற்காலிகமாகப் பின்வாங்குவது போல பாஜக அரசு நடிக்கிறது. ஆனால், விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி, இந்தச் சட்டத்திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜனநாயகத்திற்கு எதிரான இத்தகைய முயற்சிகளைக் கைவிட்டு, பிரதமர் அவர்கள் இந்தத் தன்னிச்சையான மற்றும் அநியாயமான சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை மறுசீரமைப்புக்குக் கால அவகாசம் தேவை: முதல்வர் விஜய் அறிவிப்பு!
வியாழன் 14, மே 2026 4:36:44 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

தமிழகத்தில் அமையவுள்ள புதிய ஆட்சிக்கு வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி திடீர் சிக்னல்!
சனி 9, மே 2026 3:44:29 PM (IST)

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி: விஜய்க்கு ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 11:43:27 AM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: கட்சி மாறிப் போட்டியிட்டு வென்ற முக்கியப் புள்ளிகள்!
செவ்வாய் 5, மே 2026 10:24:08 AM (IST)

வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் கவனம் : முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:53:56 PM (IST)










