» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

திங்கள் 27, மே 2024 3:49:47 PM (IST)

பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அக்கட்சி தொண்டர்களுக்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி நாளிதழில் பா.ஜ.க. விளம்பரம் வெளியிட்டதாக குற்றம்சாட்டி கடந்த வாரம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நாளிதழ்களில் ஜூன் 4-ம் தேதி அல்லது மறுஉத்தரவு வரும் வரை பா.ஜ.க. விளம்பரங்களை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. மேல்முறையீடு செய்த நிலையில், அந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து விளம்பரத்திற்கான தடையை நீக்க கோரி பா.ஜ.க. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், இந்த மனு அவசர வழக்காக உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையிலான கோடைக்கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது பேசிய நீதிபதிகள், "பா.ஜ.க.வின் விளம்பரத்தை நாங்களும் பார்த்தோம், அது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கேவலப்படுத்தும் வகையில் உள்ளது. பா.ஜ.க.வின் விளம்பரம் வாக்காளர்களின் நலன்களுக்கு ஆதரவாக இல்லை. மேலும் இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க நாங்கள் விரும்பவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்." என்றனர்.

இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பாஜகவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory