» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி : சொந்தமாக கார், வீடு, நிலம் இல்லை!

புதன் 15, மே 2024 12:15:09 PM (IST)

வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி சமர்ப்பித்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.3.02 கோடி சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

கடந்த 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு, குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்ததாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் பிரதமர மோடி தெரிவித்துள்ளார். அரசியிடம் இருந்து பெறும் வருமானம், வங்கியில் இருந்து கிடைக்கும் வட்டி ஆகியவற்றை தனது வருவாய் ஆதாரமாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ரூ.1.66 கோடிக்கு சொத்துகள் இருந்தன.

இது 2019ஆம் ஆண்டு ரூ.2.51 கோடியாகவும், 2024ஆம் ஆண்டில் ரூ.3.02 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இதில், அவரின் அசையும், அசையா சொத்துகள் மற்றும் முதலீடுகள் அடங்கும். தற்போது, பிரதமர் மோடியிடம் ரூ.2.67 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டில் தேசிய சேமிப்புகள் பத்திரங்களில் அவர் ரூ.7.61 லட்சம் முதலீடு செய்திருக்கிறார்.

இது தற்போது ரூ.9.12 லட்சமாக உயர்ந்துள்ளது. அவரின் பெயரில் வங்கியில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.2.85 கோடி உள்ளது. அவருக்கு சொந்தமாக கார், வீடு, நிலம் பங்குகள் எதுவும் இல்லை. ரொக்கமாக ரூ.52,920 வைத்துள்ளார். மேலும், தேர்தல் பத்திரத்தில் தனது மனைவியின் பெயர் ஜஷோ தாபென் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை தவிர அவர் வேறு எந்த விவரங்களை குறிப்பிடவில்லை.


மக்கள் கருத்து

yokiyanJul 8, 2024 - 05:08:35 PM | Posted IP 162.1*****

nambunga pa...

உண்மமே 23, 2024 - 06:43:46 AM | Posted IP 172.7*****

தமிழ் நாட்டில் திருட்டு அரசியல்வாதிகள் சொத்து மதிப்பு அதை விட 1000 மடங்கு மேல்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory