» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
வெள்ளி 1, மார்ச் 2024 8:13:39 AM (IST)
மீண்டும் தப்பித்தவறி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு 28-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து விவாதித்து மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்தும், காவிரி நீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மீண்டும் தப்பித்தவறி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது. இதை நான் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளராக இருந்து பேசவில்லை, எதிர்க்கட்சி தலைவராக இருந்து பேசவில்லை, முன்னாள் முதல்-அமைச்சராக பேசவில்லை.
சாதாரண விவசாயி என்ற முறையில் என் மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன். தி.மு.க. ஆட்சியிலே விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. விவசாய தொழிலாளிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தாருங்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
JOHNMar 1, 2024 - 09:06:37 PM | Posted IP 172.7*****
DMK GOVT IL ROAD / BRIGDE WORK SUPER BUT GROSSERY EXPENSE HIGH
மேலும் தொடரும் செய்திகள்

விஜய்க்கு என்று தனிப்பட்ட தத்துவமோ, கோட்பாடோ கிடையாது: சீமான் விமர்சனம்!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:20:15 AM (IST)

தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு: தேர்தல் ஆணையக் குழு ஆய்வு நிறைவு!
சனி 28, பிப்ரவரி 2026 5:16:35 PM (IST)

லட்சக்கணக்கான கோடி கடன் எங்கே போனது? தமிழக பட்ஜெட் குறித்து அண்ணாமலை கேள்வி
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:43:06 PM (IST)

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:25:19 PM (IST)

விஜய் மீதான பயத்தால்தான் தி.மு.க. இலவசங்களை அறிவிக்கிறது : நிர்மலா சீதாராமன்
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 5:16:38 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வியாழன் 22, ஜனவரி 2026 3:32:40 PM (IST)









JOHN அவர்களேMar 2, 2024 - 09:18:26 AM | Posted IP 172.7*****