» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்

செவ்வாய் 6, பிப்ரவரி 2024 4:17:39 PM (IST)

அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.   

திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில், அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் முறையாக நடக்கவில்லை, சர்வாதிகார முறையில் நடைபெற்றது. இதனால் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குற்றம்சாட்டி இருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதி மன்றத்தில்  இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனையடுத்து நீதிபதி, அ.தி.மு.க.வில் உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால், எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.மேலும் மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory