» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
பாஜக எப்போதுமே வாக்குறுதிகளை நிறைவேற்றாது: மம்தா பானர்ஜி தாக்கு!
திங்கள் 11, டிசம்பர் 2023 5:27:45 PM (IST)
ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாகச் சொன்ன பாஜகவின் வாக்குறுதி என்னாயிற்று? என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
ஜல்பைகுரி மாவட்டத்தில் நடைபெற்ற பொது விநியோக திட்ட விழாவில் பேசிய மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பிரதமரின் இலவச ரேஷன் திட்டத்தை மறந்துவிடும் என்று கூறினார்.சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி இலவச ரேஷன் திட்டம் டிசம்பர் மாதத்திற்கு பிறகும் ஐந்தாண்டுகளுக்கு தொடரும். இதனால் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவித்தார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பை விமர்சித்து மம்தா பானர்ஜி பேசியதாவது: "நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி இலவச ரேஷன் அரிசி திட்டத்தை நீட்டிப்பது குறித்து அறிவித்துள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வராவிட்டால் அவரின் அறிவிப்பு செயல்படப்போவதில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தாலும்கூட இத்திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை. ஏனென்றால் ஆட்சிக்கு வந்தபின் அவர்கள் இந்த திட்டத்தையே மறந்துவிடுவார்கள். ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாகச் சொன்ன பாஜகவின் வாக்குறுதி என்னாயிற்று?
தேர்தலுக்கு முன்பாக மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் மூடப்பட்ட ஐந்து தேயிலைத் தோட்டங்களை மறு சீரமைத்து மீண்டும் பயன்படுத்துவதற்கு உகந்ததாக மாற்றுவதாக வாக்குறுதி அளித்தனர். அந்த வாக்குறுதி தற்போது என்னவாயிற்று? பாஜக எப்போதும் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றாது." என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)










