» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

புயல், வெள்ள மீட்பு பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்: ராகுல் காந்தி

செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:41:45 PM (IST)

புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னையே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. புயல் வெள்ள பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விடிய விடிய மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் இந்த முறை பெருமளவு குறைந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்திகளைக் கேட்டு வேதனை அடைந்தேன். தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் தமிழ்நாடு, ஆந்திர, ஒடிசா மாநிலங்களில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

SURIYANDec 6, 2023 - 03:01:47 PM | Posted IP 172.7*****

காங்கிரஸ்காரர்கள் பதவி என்றால் வருவார்கள்/ களத்தில் இறங்கி வேலை என்றால் ஒருவரும் வரமாட்டார்கள். திமுக முதுகில் சவாரி செய்து அரசியல் செய்கிறார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory