» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
நாட்டின் பெயர் மாற்றுவதால் என்ன ஆகப் போகிறது? சீமான் கேள்வி
புதன் 6, செப்டம்பர் 2023 3:59:14 PM (IST)
"150 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. நாட்டுக்கு பெயர் மாற்றுவதால் என்ன ஆகப் போகிறது?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், இந்தியாவுக்கு பாரத் என பெயர் மாற்றும் திட்டம் குறித்து கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர்: "இந்த பாஜக ஆட்சியில், முன்னறிவிப்பு செய்து எந்த செயலையும் செய்தது கிடையாது. எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பாரத் என்று வையுங்கள், இல்லை சூரத் என்று வையுங்கள். அது அவர்கள் நாட்டுக்கு பெயர் வைக்கின்றனர். அதில் நான் தலையிட முடியாது.
என் நாடு தமிழ்நாடு. அதனால், அவர்கள் நாட்டுக்கு என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளட்டும். வெள்ளைக்காரர்கள் வைத்த பெயர் என்பதால் பெயர் மாற்றுகின்றனர். இந்த நாடே அவன் உருவாக்கி வைத்த நாடுதானே. வில்லியம் ஜேம்ஸ் கையெழுத்திட்டதால்தானே இந்து என அறியப்பட்டீர்கள். அந்த பெயரையும் மாற்றிவிடுங்கள். பாரத் என்ற பெயர் வைத்துவிட்டு, இந்துவுக்குப் பதில் வேறு பெயர் வைக்கட்டும்.
நாட்டுக்கு பெயர் மாற்றுவதால் என்ன ஆகப்போகிறது. 150 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. பெயரை மாற்றியதால் தள்ளுபடி செய்துவிடுவார்களா? அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, பசியில்லாத பாரதம் அப்படியெல்லாம் உருவாகி விடுமா? ஆட்சிக்கு வந்தபோதே பாரத் என்று ஏன் பெயர் மாற்றவில்லை?
4 மாதத்தில் தேர்தல் வருவதால், சிலிண்டர் விலை குறைகிறது. சட்ட விதிகளின் பெயர்கள் எல்லாம் மாறுகிறது. சந்திராயன் சரியாகச் சென்று நிலவில் இறங்குகிறது. சூரியனுக்கு ஆதித்யா செல்கிறது. இவர்கள் சேட்டை எல்லாம் சகித்துக்கொள்ள முடியாது. அதிகாரத் திமிரில் ஆட வேண்டியதுதான்.
இந்தியா ஒரு நாடல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆல் இந்தியா ரேடியோதான். இந்தியா ரேடியோ கிடையாது. மாநிலங்களவைதான் அது, மாநிலங்கள் என்றால், பல தேசங்களின் ஒன்றியம்தான் அது. அப்படியிருக்கும்போது ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே தேர்வு, நான் கேட்கிறேன் ஒரே நீர் எங்கே? ஒரே நாடு என்றால், காவிரியில் ஏன் தமிழகத்துக்கான நீரைப் பெற்றுத் தரமுடியவில்லை உங்களால்? ஒரே நாடு குறித்து பேசும் நீங்கள் ஏன் அங்கு வாய்மூடி மவுனமாக இருக்கிறீர்கள்?" என்றார்.
அப்போது அமைச்சர் உதயநிதியின் தலையை வெட்டினால் ரூ.10 கோடி தருவதாக அயோத்தி சாமியார் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான்கூட சொல்கிறேன், அந்த சாமியார் தலையை வெட்டினால் 100 கோடி தருகிறேன். சாமியார் என்பவர் அனைத்தையும் துறந்த பற்றற்றவர், சாந்தமே உருவானவர்கள்.ஆனால், அந்த சாமியார் ரவுடி போல் பேசியிருக்கிறார். உதயநிதி கருத்து கூறியிருந்தால், அவரது கருத்துடன் மோதியிருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்.
பிறப்பின் அடிப்படையில் பேதம் இருக்கிறது. மனிதனில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் இருக்கிறான் என்று அவர்கள் பேசியிருக்க வேண்டும். இந்த கருத்தில் நான் உடன்படவில்லை. மனித பிறப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பாகுபாடு பார்க்கும் எவனும் என் எதிரிதான். சாமியர்களுக்கு சாதியும், மதமும் இரண்டு கண்கள். மதத்தின் வேர் சாதி. நாங்கள் எல்லாம் இந்துக்கள் என்று சாமியார்கள் கூடவில்லை என்றால், அவர்களுக்கு பத்து பைசா தரமாட்டார்கள். அதனால், அவர்களுக்கு சனாதனம் வேண்டும். பிறப்பின் அடிப்படையில் பேதம் வேண்டும்" என்று அவர் கூறினார்.
மக்கள் கருத்து
SURIYANSep 7, 2023 - 04:09:04 PM | Posted IP 172.7*****
இவன் ஒரு கோமாளி. ஆகவே திமுக / அதிமுக தலைவர்கள் இவன் பேசுவதை கண்டுகொள்ளமாட்டார்கள். இவன் எதாவது பொய் கதைகளை உருட்டி கொண்டு இருப்பான்.....கூட்டத்தினர் ஜாலியாக கேட்டுக்கொண்டு சிரித்து விட்டு போவார்கள்
தமிழர்கள்Sep 6, 2023 - 04:13:31 PM | Posted IP 172.7*****
டேய் லூசு, உனக்கு நாட்டை பற்றி என்ன தெரியும். இவ்வளவு நாள் திமுகவை குறை சொல்லிக்கொண்டு இருந்தான் , ஒரு கேஸ் போட்டதும் இம்சை அரசன் வடிவேலு மாதிரி திமுக காலில் விழுந்து விட்டான்.... நீ ஒரு டுபாக்கூர் கோமாளி, நீயெல்லாம் வாயை திறந்து பேசலாமா? உனக்கு என்ன அருகதை உள்ளது....
UNMAISep 9, 2023 - 03:38:36 PM | Posted IP 172.7*****