» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும் போதோல்லாம் தீவிரவாதம் தலை தூக்குகிறது: ஆர்.பி. உதயகுமார்
வெள்ளி 28, அக்டோபர் 2022 3:50:05 PM (IST)
தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வரும் போதோல்லாம் தீவிரவாதம் தலை தூக்குகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தேவர் தங்க கவச விவகாரத்தில் ஈ.பி.எஸ்.,க்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யப்பட்டது. பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என சூழ்ச்சி நடந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வரும் போதோல்லாம் தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலை தூக்குகிறது. அதிமுக ஆட்சி காலங்களில் பயங்கரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. திமுக இந்தி திணிப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம் மடை மாற்றும் செயல். தமிழை அதிமுக மட்டுமே பாதுகாத்து வருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதிமுக முதலில் நிற்கும். அரசின் மெத்தன போக்கினால் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார். வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகளை தமிழக அரசு முறையாக செய்ய வேண்டும்" என அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST)

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி
வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்
வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST)

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்
திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST)

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST)

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு
சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST)










