» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

காயல்பட்டினம் பாத்திமா பள்ளியில் இருபெரும் விழா

வெள்ளி 8, மார்ச் 2024 10:03:50 AM (IST)



காயல்பட்டினம் பாத்திமா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா என இருபெரும் விழா நடந்தது. 

பள்ளி தாளாளர் அகமது முஸ்தா தலைமை வகித்தார். பள்ளி ஆலோசகர் எமி டெய்சி கிறிஸ்டி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கிப்ட்லின் வரவேற்றார். விஸ்டம் பப்ளிக் பள்ளி முதல்வர் சோபனா பிரியதர்ஷினி வாழ்த்திப்பேசினார். இதையடுத்து மாணவ_ மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ_ மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கிப்ட்லின் மற்றும் அலுவலர், ஆசிரியர் கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory