» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சிறார்கள் கதை சொல்லும் திறன் மேன்பாட்டு பயிற்சி

புதன் 31, ஜனவரி 2024 3:11:37 PM (IST)



கோவில்பட்டி தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சிறார்கள் கதை சொல்லும் திறன் மேன்பாட்டு பயிற்சி விழிப்புணர்வு கூட்டம். ஏ.வி.மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் தலைவர் மணிமொழி நங்கை தலைமையில் நடந்தது. 

சிறப்பு அழைப்பாளர் பால சாகித்திய புரஸ்கார்  விருத்தாளர் எழுத்தாளர் உதயசங்கர், தமிழ்ச்செம்மல் நல்ஆசிரியர் ஜான் கணேஷ், எழுத்தாளர் தங்கதுரை, தலைமையாசிரியர் வரகவி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் பிரபு அனைவரையும் வரவேற்றார். 

நிகழ்ச்சியில் வடக்கு திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி மாணவி மகாலட்சுமி  மாணவர் கதிர்வேல், இலக்கமி ஆலை துவக்கப்பள்ளி (கிழக்கு ) பள்ளி மாணவர்கள் கிஷோர், கோகுல், அய்.சி.எம் நடுநிலைப்பள்ளி மாணவர் ரகுராம், மாணவி சம்யுக்தா, விஸ்வகர்மா பள்ளி மாணவி மஞ்சு, நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர் வர்னேஸ்வரன், மாணவி சுகவர்னா உட்பட பல்வேறு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கதை சொல்லுதல், பாடல் பாடுதல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு தங்களின் கலை திறன்களை வெளிக்கொண்டு வந்து பாராட்டு மற்றும் பரிசு பெற்றனர். 

தலைமையாசிரியர் ராமமூர்த்தி ரூ 1000 வளர்ச்சி நிதி வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மேளாள் ஆசிரியர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர் தினகரன் உறுப்பினர் கணபதி,ஆசிரியை வனிதா, பரமேஸ்வரி, மாரியம்மாள் உட்பட பலர் மாணவர்களை பாராட்டினர். திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் கண்ணகி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

முன்.கணபதி.Jan 31, 2024 - 08:31:07 PM | Posted IP 172.7*****

சிறப்பு சார்! நன்றிகளும்,பாராட்டுகளும்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory