» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சாரண சாரணியர் பயிற்சி ஆசிரியர்களுக்கு டெலஸ்கோப் கையாளும் பயிற்சி

புதன் 31, ஜனவரி 2024 3:08:07 PM (IST)



கோவில்பட்டியில் சாரணசாரணியர் பயிற்சி ஆசிரியர்களுக்கு டெலஸ்கோப் கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி சாரணர்‌அடிப்படை பயிற்சியினை கோவில்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளை சேர்ந்த  ஆசிரியர்கள் மேற்கொண்டனர். இவர்களுக்கு சாரணர்களாக பயிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய  நற்பண்புகளான  பிறருக்கு உதவதல்,பெரியவர்களுக்கு மரியாதை செய்தல், பணிவாக பதிலளித்தல், சாலைவிதிகளை கடைபிடித்து ஆபத்தில்லாத பயணம் மேற்கொள்தல், ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றி முதலுதவி செய்தல், பேரிடரில் எவ்வாறு செயல்பட்டு பிறரைகாப்பாற்றுதல், 

திசைகளை அறிதல், தனியாக திசை தெரியாமல் தவிக்கும் நேரங்களில் எப்படி திசை அறிதல் மற்றும் செல்போன் செயலிழந்த நேரத்தில் இரவில் நட்சத்திரங்களை கொண்டு திசை அறிதல், எட்டு கோள்களை அறியவும்,மாணவர்களுக்கு காணசெய்ய தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் முத்துசாமி மாநில செயற்குழு உறுப்பினர் பங்கேற்று விளக்கினார். 

மாநில சாரண பயிற்சியாளர் சி நடராஜன்‌ சிறப்பாக பயிற்சி அளித்தார். சாரண இயக்க மாவட்ட செயலர் மோகன்‌ பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நிறைவு நாளில்  தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினா தனியார் பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி பிரபாகுமார், கோவில்பட்டி கல்வி மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி பயிற்சி ஆசிரியர்களை பாராட்டினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory