» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி சக்தி வித்யாலயாவில் 107-வது குருளையர் பிறந்த தின விழா

சனி 16, டிசம்பர் 2023 11:36:28 AM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சாரண, சாரணிய இயக்கத்தின் 107-வது குருளையர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைப்பெற்ற 107-வது குருளையர் பிறந்த தின விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பயிற்சியாளர் டி.மணிமேகலை வரவேற்று பேசினார். தமிழ்நாடு சாரண, சாரணிய இயக்க மாநில துணை ஆணையரும், மாவட்டப் பயிற்சி ஆணையரும், பள்ளியின் முதல்வருமான ஆ.ஜெயா சண்முகம் தலைமையேற்று சாரண, சாரணியர்கள், குருளையர்கள் மற்றும் நீலப்பறவையினர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கேக் வழங்கினார். 

அதன்பின் மாணவ, மாணவியர்களின் குருளையர் "கா” விளையாட்டும், குருளையர் பிரிவு மாணவர்கள் பழங்குடியினர்களாக வேடமணிந்து வந்து சாரண, சாரணிய இயக்க முறையில் இடதுகை குலுக்கல் செய்து உற்சாகப்படுத்தினார்கள். குருளையர்கள் அனைவரும் தங்கள் முறைப்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பயிற்சியாளர் எம்.உதயம்மாள் அனைவருக்கும் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory