» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் பாரதியார் 142 வது பிறந்த தின விழா

செவ்வாய் 12, டிசம்பர் 2023 7:55:43 AM (IST)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் மகாகவி பாரதியாரின் 142 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் பழனிச்செல்வம் வழிகாட்டுதலின்படி பள்ளி பொருளாளர் ரத்தினராஜா பள்ளிக்குழு உறுப்பினர்கள் தங்கமணி, பால்ராஜ் T. மனோகரன், B. செல்வம் ஆகியோரின் ஆலோசனையின் படி இவ்விழா R. தாழையப்பன் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் K.பிரபு அனைவரையும் வரவேற்றார்.

பாரதியாரின் 142 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பாரதியார் முகமூடி அணிந்த 142 மாணவர்கள் இந்திய வரைபட வடிவில் நின்று கலந்து கொண்டனர். மாணவன் நிதிஷ் குமார் பாரதியார் வேடம் அணிந்தும், மாணவி தீபஸ்ரீ பாரதியார் பிறந்த தின உறுதிமொழியாக தேசபற்று, தேசபக்தி, அனைவருக்கும் கட்டாயக் கல்வி, பாரதியாரின் முற்போக்கு சிந்தனை, பிறந்த நாட்டிற்க்கு மாணவர்கள் ஆற்ற வேண்டிய சேவை குறித்து வாசிக்க அனைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

பின்னர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும், கோப்பைகளும், வழங்கப்பட்டன. விழா நிகழ்ச்சிகளை தமிழ் மற்றும் சமூக அறிவியல் துறை ஆசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் இருபால் ஆசிரியர்களும் ஊழியர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர். ஆசிரியை மகேஸ்வரி நன்றி கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory