» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மீன்வளப் பல்கலை.யில் முதுநிலை, முனைவர் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதன் 1, நவம்பர் 2023 5:21:24 PM (IST)

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்களுக்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2023-24ம் கல்வியாண்டிற்கான முதுநிலை மற்றும்  முனைவர் பட்டப்படிப்புகளுக்கு 01.11.2023 முதல் விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. 

இப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பிற்கு 13 பிரிவுகளும், முதுகலை மீன்வளப்படிப்புக்கு 13 பிரிவுகளும், முதுகலை தொழில்நுட்பப்படிப்புக்கு 3 பிரிவுகளும், முதுகலை மீன்வள வணிக மேலாண்மை மற்றும் முதுகலை பட்டயப்படிப்பு 2 பிரிவுகளிலும் உள்ளன. இந்த ஆண்டிற்கு முனைவர் பட்டப்படிப்புக்கு 31 இடங்களும், முதுகலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கு 52 இடங்களும், முதுகலை தொழில்நுட்ப படிப்புக்கு 13 இடங்களும், முதுகலை மீன்வள வணிக மேலாண்மை பட்டப்படிப்புக்கு 20 இடங்களும், முதுகலை பட்டயப்படிப்புக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (பொறுப்பு) மற்றும் பதிவாளருமான முனைவர் ந. ஃபெலிக்ஸ் அவர்கள் இந்த கல்வியாண்டிற்கான முதுகலை மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை 01.11.2023 அன்று துவக்கி வைத்தார். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் முதுகலை மாணவர்சேர்க்கைக்கான கையேட்டினை பல்கலைக்கழத்தின் www.tnjfu.ac.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 30.11.2023 ஆகும். பூர்த்தியான விண்ணப்பங்கள் தபால் மூலமாக சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை. விண்ணப்பித்த மாணவர்களுக்கு தகுதித் தேர்வு மற்றும் நேரடி கலந்தாய்வானது முறையே 13.12.2023 மற்றும் 14.12.2023 ஆகிய நாட்களில் பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. 

விண்ணப்பத்தாரர்களுக்கு தேiவாயன அனைத்து விபரங்களும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பேராசிரியர் மற்றும் இணையதள மேற்பார்வையாளர் ந.வ.சுஜாத்குமார் என்பவரை [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ 9443126894 தொலைபேசி மூலமாகவோ வேலைநாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை பணி நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory