» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வேப்பலோடை அரசு மாதிரிப்பள்ளியில் திறன் பயிற்சி கண்காட்சி!

புதன் 1, நவம்பர் 2023 4:31:23 PM (IST)



வேப்பலோடை அரசு மாதிரிப்பள்ளியில் மழலையர் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய திறன் பயிற்சி மாதிரிகளின் கண்காட்சியினை மாணவர்களின் பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்!

தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி, யூகேஜி, 1ஆம் வகுப்பு மாணவர்களின் சிந்தனை திறனை மேம்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. அதன்படி மாணவர்கள் உருவாக்கி கொண்டு வந்த திறன் மேம்பாட்டு மாதிரிகளை ஒருங்கிணைத்து அவற்றை அனைவரும் கண்டுகளிக்கும் விதமாக அப்பள்ளியின் ஆசிரியர்கள் அமைத்திருந்தனர். இந்த கண்காட்சியினை மாணவர்களின் பெற்றோர் பார்த்து ரசித்தனர்.

அதனைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களுக்கான ஆலோசனை கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தலைமை ஆசிரியர் சேகர் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனியசாமி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் உமா சாந்தா, உதவி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை கிறிஸ்டி வரவேற்றார். கூட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மாடல்களை சிறப்பாக செய்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில்  மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory