» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பள்ளிக்கு மர்காஷிஸ் அரிமா சங்கம் சார்பில் டி.வி.வழங்கல்

சனி 28, அக்டோபர் 2023 4:35:30 PM (IST)



நாசரேத் அருகே உள்ள திருவள்ளுவர் காலனி டிஎன்டிடிஏ துவக்கப் பள்ளிக்கு மர்காஷிஸ் சிட்டி அரிமா சங்கம் சார்பில்  ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள  டி.வி.யும், நீர் சுத்திகரிப்பு  இயந்திரமும் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சிக்கு அரிமா சங்க தலைவர்  ஆல்வின் மனுக்குமார் தலைமை வகித்தார்.  மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி  முன்னாள் பொது மேலாளர் ஆனந்த ஜோதிபாலன்  ஆரம்ப  ஜெபம் செய்தார். பள்ளி  தலைமை ஆசிரியை ஞானசெல்வி வரவேற்றார். மாணவ  மாணவிகளின்  நடனம், சிலம்பம், கராத்தே  மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதில் மர்காஷிஸ் சிட்டி அரிமா சங்க செயலாளர் ஆசிரியர் விவின் ஜெயக்குமார், பொருளாளர் அசுபதி பிரதீப் ,  ராஜசேகர், ஆசிரியை அமுதா  உள்பட பலர் கலந்து கொண்டனர் ‌.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory