» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சக்தி வித்யாலயாவில் 77-வது சுதந்திர தின விழா

செவ்வாய் 15, ஆகஸ்ட் 2023 11:44:27 AM (IST)



தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில்  77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவில் ஆசிரியை பாக்கியலெட்சுமி வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஆ.ஜெயாசண்முகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாணவ, மாணவியர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சொற்பொழிவும், தேசபக்தி பாடல்கள், தேசபக்தி நடனங்கள், நாடகம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரகாந்தியின் வேடம் அணிந்து மாணவி ஸ்ரீமதி மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் வேடம் அணிந்து ரோஸ்மிதா ஆகியோர் ஆற்றிய சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்தது. விழா நிகழ்வினை ஆசிரியை க.செல்வபொன்னரசி தொகுத்து வழங்கினார். ஆசிரியை ஞா.ஜெபமாலை நன்றி கூறினார். நிறைவில் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 


மக்கள் கருத்து

VijaikumarAug 15, 2023 - 02:24:57 PM | Posted IP 172.7*****

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த் 🌹🌹🌹🌹

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory