» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் கால்பந்து மைதானம் திறப்பு விழா!

சனி 12, ஆகஸ்ட் 2023 9:12:42 PM (IST)

நாசரேத், ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்பந்து செயற்கை புல்தரை மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. 

இந் நிகழ்ச்சியை தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் ஜெபம் செய்து துவக்கி வைத்தார்.கல்லூரியின் பாடல் குழுவினர் சிறப்பு பாடல்பாடினர்.கல்லூரியின் முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்புரை ஆற்றினார். தூத்துக்குடி–நாசரேத் திருமண்டல உப தலைவர் தமிழ்செல்வன் மைதானத்தைஆசீர்வதித்து ஜெபித்தார். திருமண்டல லே செயலர் மற்றும் திரும ண்டல கல்லூரிகளின் நிலைவரக் குழு செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் மைதானத்தை திறந்து வைத்தார். திருமண்டல உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் கல்வெட்டினை திறந்து வைத்தார். 

புதிய மைதானத்தில் முதல் கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடிய நாசரேத் வெட்ரன்ஸ் அணியினர் மற்றும் லு. ஆ.ஊ.யு. அணியினருக்கு இடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற நாசரேத் வெட்ரன்ஸ் அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் நாசரேத் மர்காஷியஸ் மேல் நிலைப்பள்ளி முதல் இடம் மற்றும் பியர்ல்ஸ் பப்ளிக் பள்ளி இரண்டாம் இடம் பிடித்தனர். அவர்களுக்கு வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ட்டன், நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி, முதலூர் ஆலய தலைமை குருவானவர் செல்வன் மகாராஜா, நாசரேத் மர்காஷியஸ் மேல் நிலைப்பள்ளி தாளாளர் சுதாகர், தூய பெண்கள் மேல் நிலைப்பள்ளி தாளாளர் வயோலா மர்காஷிஸ் மற்றும் தலைமை ஆசிரியை ஜூலியட், புனித லூக்கா மருத்துவமனை நிர்வாகி பிலிப் ஜெயசிங், புனித லூக்கா சமுதாயக் கல்லூரி தாளாளர் செல்வின், மூக்குபீறி, மாற்கு மேல் நிலைப்பள்ளி தாளாளர் செல்வின், முதலூர் தூய மிகாவேல் பள்ளி தாளாளர் சாந்தராஜா ரெத்தினராஜ், மெஞ்ஞானபுரம் எலியட் மேல் நிலைப்பள்ளி தாளாளர் சசிகுமார், பிச்சுவிளை மேரி சௌந்திரபாண்டியன் நடுநிலைப் பள்ளி தாளாளர் பிராங்லின், ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், திருமண்டல செயற்குழு உறுப்பினர் பிரவின் ஐசக், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், ஹாரிஸ் ரவி, மெஞ்ஞானபுரம் பிரவின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் சாம்சன் மோசஸ், ராஜாசிங் ஹாரிஸ்டன், எபனேசர் சாமுவேல், ஆசிரியர் பிரதிநிதி செரீன், நாசரேத் சேகர உறுப்பினர்கள் இம்மானுவேல், ஜேம்ஸ், செல்வின் ஆர்தர், பாஸ்கர், வாஷிங்டன் சுந்தர், முன்னாள் சேகர செயலர் எலியேசர், முன்னாள் சேகர பொருளாளர் மர்காஷிஸ், உடன்குடி கூட்டுறவு வங்கி செயலர் ஆனந்தராஜ், நாசரேத் பேரூராட்சி துணைத்தலைவர் அருன்சாமுவேல், நாசரேத் முன்னாள் கால் பந்தாட்ட வீரர்கள் பொன்ராஜ், குமார், சாமுவேல் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி பர்சார் தனபால் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பேராசியர் வெலிங்டன் தொகுத்து வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர் கோயில்ராஐ; ஞானதாசன், உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory